ஸ்ரீலங்கன் விமானத்தில் திடீர் புகை - மெல்பர்னில் அவசரமாக தரையிறக்கம்
12 மாசி 2024 திங்கள் 13:35 | பார்வைகள் : 16528
ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தினுள் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 100 இற்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானியின் நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு உயிர் சேதம் இன்றி விமானம் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan