இந்தியாவின் UPI ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இலங்கையிலும்

12 மாசி 2024 திங்கள் 12:36 | பார்வைகள் : 7624
இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று பிற்பகல் இலங்கை மற்றும் மொரிஷியசில் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் மெய்நிகர் வழியாக கலந்துகொண்டனர்.
இலங்கையின் LankaQR நிறுவனத்துடன் இணைந்து UPI கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக இலங்கையில் உள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.