Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்  நாட்டை கடுமையாக எச்சரிக்கும் ஈரான் 

இஸ்ரேல்  நாட்டை கடுமையாக எச்சரிக்கும் ஈரான் 

12 மாசி 2024 திங்கள் 09:17 | பார்வைகள் : 7124


இஸ்ரேல் நாடாது ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் வரை ஓயமாட்டோம் என உறுதி கொண்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) விடுத்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலானது அதன் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற பதற்றமும் அச்சமும் காணப்படும் நிலையிலேயே ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை லெபானின் மீது பாரிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அது இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூவின் இறுதி முடிவுவாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்