Paristamil Navigation Paristamil advert login

யாழில் மரணமடைந்த பெண் - காய்ச்சல் குறித்து ஆராயும் வைத்தியசாலை

யாழில் மரணமடைந்த பெண் - காய்ச்சல் குறித்து ஆராயும் வைத்தியசாலை

1 ஆவணி 2023 செவ்வாய் 09:44 | பார்வைகள் : 2505


யாழில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்,  உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி எனும் 46 வயதான  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில். தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் காய்ச்சலின் தீவிர தன்மை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில் ,அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்