பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து! 27 பேர் பலி
.jpg)
1 ஆவணி 2023 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 12860
பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு 70 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர்.
ஏரியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்தது.
இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்தனர்.
ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.
இந்த விபத்து தொடர்பில் தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் இதுவரை 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025