Pantin : வீட்டுத் தோட்டத்தில் இருந்து மனித எலும்புகள் கண்டுபிடிப்பு!
8 மாசி 2024 வியாழன் 19:57 | பார்வைகள் : 11253
Pantin (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் இருந்து மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Avenue Édouard-Vaillant வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அவை 5 வயதுடைய சிறுவனுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி பெண் ஒருவர் 93 ஆம் மாவட்ட காவல்நிலையத்துக்கு வருகை தந்து, தனது கணவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது ஐந்து வயது மகனைக் கொன்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.
பின்னர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதில், சிறுவனது சடலம் கிடைக்கவில்லை. இந்த வழக்கு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாரணைகளின் மேல் விசாரணைகள் மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டுத் தோட்டத்தின் ஒரு பகுதியை தோண்டினர்.
அதன்போது, சில மனித எலும்புகள் கிடைத்துள்ளன. அவை 2004 ஆம் அண்டு கொல்லப்பட்ட சிறுவனின் எலும்புகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan