பா-து-கலே மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - பிரதமர் நேரில் விஜயம்!
8 மாசி 2024 வியாழன் 09:48 | பார்வைகள் : 9357
பா து கலே மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை மழை வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்புக்காரணமாக அங்கு அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் (Météo-France) அறிவித்துள்ளது.
இன்று காலை Canche கால்வாய் 1.92 மீற்றர் உயரத்தை எட்டியது. கடந்த நவம்பர் மாத மழையில் 2.09 மீற்றர் உயரத்தை எட்டியிருந்தது.
இந்நிலையில், பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று பா து கலேக்கு பயணிக்கிறார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் பா-து-கலே மாவட்டம் பலத்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ள பாதிப்பு நிதியாக €80 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan