இலங்கையில் பெண்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

7 மாசி 2024 புதன் 14:40 | பார்வைகள் : 5049
இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இரகசியமான முறையில் கெமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த காவல்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025