Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தனது இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம்

இலங்கையில் தனது இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம்

7 மாசி 2024 புதன் 14:37 | பார்வைகள் : 5430


இலங்கையில் தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவர் கைது செய்யப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்தார்.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

இதற்கமைய, பிள்ளைகளின் தாயார் வெளிநாட்டில் இருப்பதாகவவும், பிள்ளளைகள் பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும், பிள்ளைகளின் கொழும்பில் உள்ள கார் சுத்தம் செய்யும் மையத்தில் பணிபுரிந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்