Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய இரவு விடுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல்... வெளியாகிய காரணம்

பிரித்தானிய இரவு விடுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல்... வெளியாகிய காரணம்

31 ஆடி 2023 திங்கள் 08:02 | பார்வைகள் : 3126


பிரித்தானியாவில் சவுத் யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில்   ரசாயன தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அந்த இரசாயனத்தை சுவாசித்ததால்  பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

8 பேர் வரை வைத்தியசாலையில்  அனுமதித்ததாக தெரியவந்துள்ளது.

டான்காஸ்டர் பகுதியில் அமைந்துள்ள அந்த இரவு விடுதிக்கு விடிகாலை 5 மணிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சுமார் 60 பேர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதில் 8 பேர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரும் இருமல், தும்மல் மற்றும் மூச்சு விட சிரமப்பட்டனர் என்றே நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு விடுதிக்குள் ரசாயன தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்படும் என சவுத் யார்க்ஷயர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 8 பேர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அது எந்தவகையான ரசாயனம் என்பது குறித்து அறிய, நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற குற்றச்செயல்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது எனவும், இரவு நேர பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, தொடர்புடைய இரவு விடுதியில் காணப்பட்ட நபர்கள் எவரேனும், நடந்தவற்றை விளக்கினால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்