ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் செய்யப் போகிறார்களா?

8 தை 2024 திங்கள் 09:03 | பார்வைகள் : 6561
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.இந்த தகவல் ஓரளவு உண்மையாக இருக்கும் என்று கூறப்படுவதால் அதுபற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கீதா கோவிந்தம் என்ற படத்தில் இணைந்து நடித்த இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது.அடுத்து வெளிவந்த டியர் காம்ரேட் படம் சரியாக ஓடாவிட்டாலும், இருவரின் இடையிலான நட்பில் தொடர்ந்து நெருக்கம் ஏற்பட்டது.
ஒவ்வொரு பண்டிகை நாட்களின்போதும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் வீட்டிற்கு தவறுவதில்லை என்று தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த ஜோடி சமீபத்தில் விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற வந்ததால், இருவருக்கும் இடையே திருமணம் நடக்கலாம் என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில் இருவரின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் பரவுகிறது. பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடக்க கூடும் என்று இன்னொரு தகவல் வெளிவந்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025