இலங்கையில் டிஜிட்டல் முறையில் பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகம்
7 தை 2024 ஞாயிறு 13:49 | பார்வைகள் : 6366
இலங்கையில் டிஜிட்டல் முறையில் பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த இதனை தெரிவித்துள்ளார்.
உலகலாவிய ரீதியில் டிஜிட்டல் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan