ஓய்வுபெறும் முடிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ...?
 
                    7 தை 2024 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 8656
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜுமேரா தீவில் ஆடம்பர குடியிருப்பு ஒன்றை வாங்கிய போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஓய்வுக்கு தயாராவதாக தகவல் கசிந்துள்ளது.
துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள பெரும் கோடீஸ்வரர்களுக்கான தீவில் போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடம்பர குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவின் Al-Nassr கால்பந்து அணியின் தலைவராக உள்ள ரொனால்டோ 2023ல் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்துள்ளார்.
முக்கியமான பல நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள ரொனால்டோ, தற்போது துபாய் மாகாணத்திலும் குடியிருப்பு ஒன்றை சொந்தமாக்கியுள்ளார்.
பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும் தங்கும் பகுதியில் ரொனால்டோ குடியிருப்பு வாங்கியுள்ள நிலையில், அதன் வசதிகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால் ஜுமேரா தீவில் பொதுவாக ஒரு குடியிருப்புக்கு 6 படுக்கையறை, நீச்சல் குளம், ஸ்பா மற்றும் கடற்கரையை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் வசதிகள் என அனைத்தும் அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
ரொனால்டோ தற்போது ஆண்டுக்கு 175 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்து வருகிறார்.
மேலும், பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமான ஒரு பகுதியில் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளதால், ரொனால்டோ ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan