தன்னைவிட 22 வயது குறைந்த இளம்பெண்ணை திருமணம் செய்யும் பிரேம்ஜி

7 தை 2024 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 6785
இசையமைப்பாளரும் நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரனும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவரது அண்ணனும் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் பிரேம்ஜி.
இந்த நிலையில் இந்த வருடம் நிச்சயம் தனது திருமணம் நடக்கும் என புத்தாண்டு தினத்தன்று சோசியல் மீடியாவில் நம்பிக்கை தரும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரேம்ஜி. இதனையடுத்து அவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அவர் தன்னைவிட 22 வயது குறைந்தவரான பின்னணி பாடகி வினைதா சிவகுமார் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்கிற தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2021ல் பிரேம்ஜி அமரனின் பிறந்தநாளன்று காதல் பொங்கி வழியும் விதமாக வினைதா சிவக்குமார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த அவரது சோசியல் மீடியா பதிவும் இவர்களது காதலை உறுதி செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் பிரேம்ஜி தரப்பிலிருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025