இனி உலகின் மிக உயரமான கட்டிடம் ...

7 தை 2024 ஞாயிறு 08:25 | பார்வைகள் : 7779
சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் கிங்டம் டவர் தான் உலகின் மிக உயரமான கட்டிடம் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் தற்போது உலகின் மிக உயரமான கட்டிடமாக உள்ளது.
இதன்மூலம் இந்த கட்டிடம் 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் உள்ளது. இதில் உலகின் தலைசிறந்த நட்சத்திர ஹொட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகவும் இது உள்ளது.
இந்த நிலையில் புர்ஜ் கலிபாவை விட உயரமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனால் தனது அந்தஸ்தை புர்ஜ் கலிபா இழக்கப் போகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் பெயர் கிங்டம் டவர் (Kingdom Tower). இதனை Jeddah Tower என்றும் கூறுகிறார்கள்.
இக்கட்டிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் உயரம் 1,000 மீற்றருக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவை அமைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025