Essonne : திருமணத்தின் போது துப்பாக்கிச்சூடு! - இருவர் கைது!!

6 தை 2024 சனி 19:05 | பார்வைகள் : 9533
திருமண நிகழ்வொன்றின் போது துப்பாக்கியால் சுட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் Savigny-sur-Orge (Essonne ) நகரில் இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை நண்பகல் இச்சம்பவம்
rue des Marguerites வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. அங்கு திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், திருமணத்து வருகை தந்த இருவர், திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இரு தடவைகள் சுடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் திருமணம் இடம்பெற்ற இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்களை A6 சாலையில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025