பரிஸ் : திருடர்களை மடக்கிப்பிடித்த நபர் - மூவர் கைது!!

6 தை 2024 சனி 18:57 | பார்வைகள் : 9461
திருடர்கள் சிலர் திருடச் சென்ற வீடொன்றில் எக்குத்தப்பாக மாட்டுப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிஸ் 3 ஆம் வட்டாரத்தின் rue des Tournelles வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. 12.30 மணி அளவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவினை திறந்த உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று முகக்கவசம் அணிந்த திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை திருட முற்பட்டனர்.
ஆனால் 63 வயதுடைய வீட்டின் உரிமையாளர் சத்தமாக கத்தி அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் விரைந்து வந்த அவர்கள் அனைவரும் திருடர்களை நெருங்கியுள்ளதுடன், பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறைக்குள் வைத்து மூவரையும் பூட்டியுள்ளனர்.
அதையடுத்து அவர்கள் காவல்துறையினரை அழைக்க, விரைந்து வந்த அவர்கள், உடனடியாக அம்மூவரையும் கைது செய்தனர். 15 தொடக்கம் 17 வரையுள்ள மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025