Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் நீதிபதியைத் தாக்கிய இளைஞர்! நீதிமன்றத்தில் பரபரப்பு

அமெரிக்காவில் நீதிபதியைத் தாக்கிய இளைஞர்! நீதிமன்றத்தில் பரபரப்பு

6 தை 2024 சனி 09:49 | பார்வைகள் : 6154


அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள  கிளார்க் கவுன்டி நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே குற்றவாளிக் கூண்டில் இருந்த இளைஞர், நீதிபதியைத் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று வழக்கு விசாரணைக்காக  ரெட்டென் எனும் இளைஞர் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 

இதன்போது வழக்கை  விசாரித்த பெண் நீதிபதி மேரி கேய், இளைஞரை காவலில் இருந்து விடுவிக்க மறுத்தார்.

அப்போது ஆத்திரமடைந்த இளைஞர், யாரும் எதிர்பாராத வேளை நீதிபதியின் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். 

இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரைத் தாக்கி, படுகாயமடைந்த நீதிபதியைப் பத்திரமாக அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்