Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் உறையும் அபாயம்! - 13 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன - பா-து-கலே வெள்ள நிலவரம்!

வெள்ளம் உறையும் அபாயம்! - 13 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன - பா-து-கலே வெள்ள நிலவரம்!

5 தை 2024 வெள்ளி 22:01 | பார்வைகள் : 8645


பா-து-கலே வெள்ளத்தின் பிடியில் இருந்து முற்றாக வெளிவரவில்லை. வெள்ளம் புகுந்துள்ள 13 பாடசாலைகள் திங்கட்கிழமை திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மாலை தொடர்ந்தும் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மழையுடன் அங்கு கடும் குளிரும் நிலவி வருகிறது. இதானால் வெள்ளம் உறைவதற்குரிய ஆபத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்ட வீடுகளுக்கு அவசரகால உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2000 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், 43 வியாபார நிலையங்களிலும், 14 அலுவலகங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

அதேவேளை, பாடசாலைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் 13 பாடசாலைகள் திங்கட்கிழமை திறக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் இதுவரை ஒருவர் பலியாகியும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்