பணவீக்கம் அதிகரிப்பு! - பொருட்கள் விலையேற்றம்..?/!!
 
                    4 தை 2024 வியாழன் 13:59 | பார்வைகள் : 11299
கடந்த நவம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் டிசம்பரில் பிரான்சின் பணவீக்கம் சிறிதளவில் அதிகரித்துள்ளது. அதையடுத்து எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
3.5% சதவீதத்தில் இருந்து பணவீக்கம் 3.7% சதவீதமாக அதிகரித்துள்ளதாக பிரான்சின் தேசிய புள்ளிவிபர நிறுவனம் (INSEE) அறிவித்துள்ளது. இதனால் 2022 ஆண்டு டிசம்பரோடு ஒப்பிடுகையில் சென்ற டிசம்பரில் 5.6% சதவீதத்தால் எரிபொருட்களின் (எரிபொருள், எரிவாயு, மின்சாரம்) விலை அதிகரித்துள்ளது.
அதேவேளை, உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த 2023 ஆம் ஆண்டு வசந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த டிசம்பரில் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire, “கொவிட் மற்றும் உக்ரேன் யுத்தத்தினால் பணவீக்கம் மிகவும் பாதித்துள்ளது. ஜனவரியிலும் இது தொடரலாம்..!” என தெரிவித்திருந்தார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan