பிரான்சில் - இரண்டு ஆண்டுகளில் 50% அதிக வருவாய் ஈட்டிய TikTok!

4 தை 2024 வியாழன் 13:42 | பார்வைகள் : 8573
சீனாவைச் சேர்ந்த பிரபல சமூகவலைத்தளமான டிக்டொக் பிரான்சில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் வருவாய் 50% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஆண்டு வருவாயாக 2.5 மில்லியன் யூரோக்கள் ஈட்டிய டிக்டொக் நிறுவனம், 2021 ஆம் ஆண்டில் 29.6 மில்லியன் யூரோக்கள் வருவாய் ஈட்டியிருந்தது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டில் 44.3 மில்லியன் யூரோக்கள் வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 49.7% சதவீதம் அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் பிரான்சில் ஈட்டிய வருமானம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை என்றபோதும், குறித்த நிறுவனம் உலகம் முழுவதும் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது.
சென்ற ஆண்டு ஜூலையில் டிக்டொக் செயலிக்கு எதிராக பல இறுக்கமான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்திருந்தது. 14 வயது தொடக்கம் பலர் இந்த செயலிக்கு அடிமையாக இருப்பதாகவும், பல தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற சில நாடுகள் இச்செயலிக்கு தடையும் விதித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025