Paristamil Navigation Paristamil advert login

பலத்த பாதுகாப்புடன் யாழ் சென்றடைந்த ரணில்

பலத்த பாதுகாப்புடன் யாழ் சென்றடைந்த ரணில்

4 தை 2024 வியாழன் 11:32 | பார்வைகள் : 5580


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், மாவட்ட செயலகத்தை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் பாடசாலை அருகே உலங்கு வானூர்தி மூலம் வந்திரங்கிய ஜனாதிபதி, வாகன தொடரணியாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணிலின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மற்றம் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்