PSG கழகத்துக்காக அதிக ’கோல்’! - Kylian Mbappé சாதனை!!

4 தை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 7528
PSG கழகத்துக்காக விளையாடிய வீரர்களில் அதிகளவு கோல்களை அடித்த வீரராக நட்சத்திர வீரர் Kylian Mbappé சாதனை படைத்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற PSG மற்றும் Toulouse அணிகளுக்கிடையிலான சாம்பியன் போட்டியில், PSG கழகம் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 44 ஆவது நிமிடத்தில் Kylian Mbappé கோல் ஒன்றை அடித்தார். PSG கழகத்துக்காக அவர் அடித்த 201 கோல் ஆகும்.
அதையடுத்து, பரிஸ் கழகத்துக்காக அதன் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச கோல் எனும் சாதனையைப் படைத்தார். முன்னதாக 200 கோல்களுடன் இந்த சாதனையை Edinson Cavani தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிக குறுகிய காலத்தில் Kylian Mbappé படைந்த இந்த சாதனை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.