பரிஸ் : Cristal கட்டிடத்தின் மேலே பறக்க உள்ள உலங்குவானூர்தி!
3 தை 2024 புதன் 10:11 | பார்வைகள் : 11013
பரிசில் உலங்குவானூர்தி பறப்பதற்கு அனுமதி கோருவது கட்டாயமாகும். வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பரிசில் உலங்குவானூர்தி ஒன்று வட்டமடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.
15 ஆம் வட்டாரத்தின் Quai André-Citroën பகுதியில் உள்ள tour Cristal மேலே ஒரு இரும்புக்கோபுரம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரத்துக்கு தேவையான இரும்பு கம்பிகளை எழுத்துச் செல்லவே இந்த உலங்குவானூர்தி பறக்க உள்ளது.
இரட்டை இயந்திரம் கொண்ட சக்திவாய்ந்த Super Puma எனும் கறுப்பு நிற உலங்குவானூர்தி சனிக்கிழமை காலை 8.45 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக பல தடவைகள் பறப்பதைக் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மழை புயல் போன்ற இயற்கை பாதிப்புக்கள் இருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்வு பிற்போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan