வடிவேலு- பகத் பாசில் இணையும் படத்தின் கதை என்ன தெரியுமா?

3 தை 2024 புதன் 07:53 | பார்வைகள் : 8759
’மாமன்னன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில் இணையும் புதிய படத்தின் கதை என்ன என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வடிவேலுவின் இறுக்கமான நடிப்பையும், பகத்தின் வில்லத்தனத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். படமும் 55 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் பெற்றதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், வடிவேலு-பகத் கூட்டணி மீண்டும் ஒன்றிணைகிறது.
இந்தப் புதிய படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரிக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் புரொடக் ஷன் பேனரில் இந்தப் படம் 98வது தயாரிப்பாக உருவாக இருக்கிறது. கிருஷ்ண மூர்த்தி கதை எழுத, இயக்குநர் சுதீஷ் ஷங்கர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இவர் தமிழில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'ஆறு மனமே' என்ற படத்தை இயக்கியவர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் புதிய படத்தின் கதை என்ன என்பது குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணம் செய்யும் ஒரு வாகனத்தில் இளைஞரான பாசிலும் முதியவரான வடிவேலுவும் பயணிக்கின்றனர். அப்போது நடக்கும் காமெடியான நிகழ்வுகளும், பின் த்ரில்லர் கதைக்களத்திற்கு மாறும்போது என்ன ஆகிறது என்பதுதான் கதையாம்.
ஜனவரி கடைசி வாரத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. வடிவேலு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்கிறார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025