லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்! - தொலைபேசியில் இஸ்ரேலிய பிரதமரை அழைத்த ஜனாதிபதி மக்ரோன்!
3 தை 2024 புதன் 08:36 | பார்வைகள் : 9417
ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டு வரும் இஸ்ரேல், தங்களது எல்லையைக் கடந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் துணைத்தலைவர் Saleh al-Arouri கொல்லப்பட்டுள்ளார்.
லெபனானின் பெய்ரூட் நகரில் Saleh al-Arouri பதுங்கியிருந்த நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவர் கொல்லப்பட்டத ஹமாஸ் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், ’எந்த ஒரு தீவின மனப்பான்மையும் தவிர்க்கப்பட வேண்டியது!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியூடாக இஸ்ரேலிய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன் இதனை வலியுறுத்தியதாக எலிசே மாளிகை குறிப்பிட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan