லேடி சூப்பர்ஸ்டாருடன் இணையும் அருண்ராஜா காமராஜ்!
3 தை 2024 புதன் 06:28 | பார்வைகள் : 6330
கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜாவின் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார். கனா படத்துக்கு பிறகு வெற்றி இயக்குனராகியுள்ளதாக அவர் இப்போது லேபில் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வைரல் ஹிட்டானது.
இந்நிலையில் அடுத்து அவர் இயக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan