கமல்ஹாசனின் இந்தியன் 2 ஏப்ரலில் வெளியாகிறதா?
2 தை 2024 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 8269
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என சொல்லப்பட்டது.
இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டது. இப்போது அந்த ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்தியன் 2 படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan