தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

2 தை 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 8712
தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை 02 ஆம் திகதி தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம் செய்தபோதே இனந்தெரியாத நபரொருவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உடனடியாக உள்ளூர் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் அவரது கழுத்தில் சுமார் ஒரு சென்றி மீற்றர் அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் YTN தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் லீ ஜே மியுங்யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025