பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய விசா விதி
2 தை 2024 செவ்வாய் 05:44 | பார்வைகள் : 15525
பிரித்தானியாவில், 2024 ஜனவரியில், புதிய விசா விதி ஒன்று அமுலுக்கு வருகின்றது.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் பிரித்தானியா வரும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அதில் ஒரு நல்ல செய்தியும் அடங்கியுள்ளது.
சுற்றுலா விசாவில் பிரித்தானியா வந்துள்ள வெளிநாட்டவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், பிரித்தானியாவில் பணி செய்ய அனுமதி அளிக்கும் வகையில், இம்மாதம், அதாவது, ஜனவரி 31ஆம் திகதி, விசா விதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
சுற்றுலா விசா வைத்திருப்போர், வாடிக்கையாளர்களுடன் பணி செய்யவும், பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தங்கள் பணியைத் தொடரவும் அனுமதியளிக்கப்பட உள்ளது.
இந்த அனுமதி, வாடிக்கையாளர்களுடன் பணி செய்வோர், சில குறிப்பிட்ட அறிவியலாளர்கள், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் கல்வியாளர்கள், சட்டத்தரணிகள் முதலான சில குறிப்பிட்ட பிரிவினருக்கு, சில நிபந்தனைகளின் பேரிலேயே வழங்கப்பட உள்ளது.
உண்மையில், சுற்றுலா விசாவில் பிரித்தானியா வந்தும் பணி செய்யும் இந்த பிரிவினரால், பிரித்தானியாவுக்கு லாபம் ஏற்படவேண்டும் என்பதே இந்த விதியின் உண்மையான நோக்கம் ஆகும்.
பிரித்தானியாவில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை உத்வேகப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan