ஜப்பானில் நிலநடுக்கம்! - ஜனாதிபதி மக்ரோன் உதவிக்கரம்!!

2 தை 2024 செவ்வாய் 06:03 | பார்வைகள் : 9815
ஜப்பானில் நேற்று புதுவருடம் பெரும் சோகத்துடன் ஆரம்பித்தது. அடுத்தடுத்து 50 நிலநடுக்கங்கள் பதிவாகின. இறுதியாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ஆறு பேர் பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது.
(புகைப்படம் : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேதமடைந்துள்ள வீதி)
முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், பெரும் உயிராபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஜப்பானுக்கு தனது ஒற்றுமையை தெரிவித்துள்ளார்.
”“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மகத்தான வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்." என மக்ரோன் குறிப்பிட்டார்.
ஜப்பானின் பிரதமர் Fumio Kishida இடம், பிரான்ஸ் உதவிக்கு தயாராக இருப்பதையும் குறிப்பிட்டார்.
புகைப்படம் : ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் X சமூகத்தள பதிவு.