Paristamil Navigation Paristamil advert login

புத்தாண்டில் ஒரு சர்ப்ரைஸ்..

புத்தாண்டில் ஒரு சர்ப்ரைஸ்..

1 தை 2024 திங்கள் 10:46 | பார்வைகள் : 5767


தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’GOAT’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது 

இந்த நிலையில் இன்றைய புத்தாண்டு தினத்திலும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சற்றுமுன் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ’GOAT’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’GOAT’ இரண்டாவது லுக்கை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான விஜய்யின் லுக் குறிப்பாக அவரது இளமையான லுக் ரசிகர்களை திருப்திப்படுத்திய நிலையில் இன்றைய செகண்ட் லுக்கில் விஜய்யின் லுக் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்