வடகொரியா ராணுவத்தினருக்கு கிம் ஜாங் உன்னின் அதிரடி உத்தரவு

1 தை 2024 திங்கள் 08:50 | பார்வைகள் : 7069
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா கூட்டணிக்கு எதிராக வடகொரியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த சபதம் ஏற்றுள்ளார் கிம் ஜாங் உன்.
இதுதொடர்பில் கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதில், ராணும் மேலும் மூன்று உளவு செயற்கைகோளை செலுத்த இருப்பதாகவும், அணு ஆயுதங்களை அதிகளவில் தயாரிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடத்தும் டிரோன்களை தயாரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக ராணுவ மோதல் அதிகரிக்குமானால் தயக்கம் ஏதும் இன்றி முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கிம் ஜாங் முடிவெடுத்துள்ளதாகவும்,
இதுதொடர்பில் ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025