Paristamil Navigation Paristamil advert login

’பெரும் நம்பிக்கைக்குரிய ஆண்டு! - புதுவருட வாழ்த்துச் செய்தி வெளியிட்ட ஜனாதிபதி மக்ரோன்!

’பெரும் நம்பிக்கைக்குரிய ஆண்டு! - புதுவருட வாழ்த்துச் செய்தி வெளியிட்ட ஜனாதிபதி மக்ரோன்!

1 தை 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 11197


இந்த புதுவருடம், பெரும் நம்பிக்கைக்குரிய மற்றும் பெருமை மிகுந்த ஆண்டாக அமையும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டில் இடம்பெற்ற நிகழ்வுகளையும், இந்த புதிய ஆண்டில் இடம்பெற உள்ள நிகழ்வுகளையும் சுருக்கமாக நினைவுகூர்ந்தார். ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மக்ரோன், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குடிவரவு சீர்திருத்தம் தொடர்பாகவும் தனது ஆதரவு கருத்தினையும் வெளியிட்டார்.

அதேவேளை, இந்த புதிய ஆண்டில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும், நோர்து-டேம் தேவாலயம் மீள திறக்கப்பட உள்ளதையும் குறிப்பிட்டார்.

’இந்த 2024 ஆம் ஆண்டு மிகவும் உறுதியான, நம்பிக்கைக்குரிய ஆண்டாக அமையும்!” எனவும் தெரிவித்தார். இந்த உரை 13 நிமிடங்கள் நீடித்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்