Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : பரிசில் பாரிய தீ விபத்து! - 52 பேர் வெளியேற்றம்!!

விசேட செய்தி : பரிசில் பாரிய தீ விபத்து! - 52 பேர் வெளியேற்றம்!!

31 மார்கழி 2023 ஞாயிறு 18:14 | பார்வைகள் : 9310


பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, 52 பேர் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

rue de la Roquette வீதியில் உள்ள ஆறு அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. கட்டிடத்தின் கூரையை எரிந்த தீ, அருகில் உள்ள கட்டிடம் ஒன்றுக்கும் பரவ முற்பட்டது.

காலை 5 மணி அளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டது. இத்தீ விபத்தில் 76 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 60 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்