Calvados : தீ விபத்தில் இருவர் பலி!
31 மார்கழி 2023 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 11967
Calvados மாவட்டத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று வருடக்கடைசி நாள் அதிகாலை 4 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Lisieux (Calvados) நகரில் உள்ள 100 சதுர மீற்றர் அளவுடைய பண்ணை வீடு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்பகுதியில் தீயணைப்ப்ய் படையினரின் எண்ணிக்கை போதாததால் அருகில் உள்ள Lisieux, Touques, Pont-L'Evêque, Blangy மற்றும் Dozulé போன்ற சிறு நகரங்களில் இருந்து 25 தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் 69 மற்றும் 71 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan