இலங்கையில் நாளை முதல் மீண்டும் உணவு வகைகளின் விலையில் மாற்றம்
31 மார்கழி 2023 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 12155
இலங்கையில் உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் (01) அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 25 ரூபாவினாலும், சிற்றூண்டி உணவுகளின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹர்சன ருக்ஷான் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan