இன்று மாலை வெளியாகும் தளபதி 68 படத்தின் தலைப்பு !

31 மார்கழி 2023 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 7982
விஜய் நடிக்கும் 68 ஆவது படத்தின் முதல் தோற்றம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள இந்த படத்தினை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25 ஆவது திரைப்படமாகும். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
விஜயுடன் இந்த படத்தில் லைலா.,மீனாக்ஷிசவுத்ரி,நடிகர் பிரசாந்த்,நடிகர் பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஸ்னேகா, நடிகர் மோகன், ஜெய்ராம், அஜ்மல், யோகிபாபு, vtv கனேஷ்,வைபவ், பிரேம்ஜி,அர்விந்த் ஆகாஷ்,ஆஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த படத்துக்கு கோட் (goat) அல்லது பாஸ் என்று பெயர் இருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட இருந்த நிலையில் திடீரென நடிகர் விஜயகாந்த் இறந்ததால் அறிவிப்பை படக்குழு தள்ளி வைத்தது. இந்த நிலையில் புத்தாண்டில் புதிய அறிவிப்பு டிரெண்டாக வேண்டும் என்பதற்காக விஜயின் 68 ஆவது படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட இருக்கிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025