வளர்ப்பு நாயின் கோரத்தாக்குதலில் ஒருவர் பலி! - பெண் ஒருவர் படுகாயம்!!
30 மார்கழி 2023 சனி 16:56 | பார்வைகள் : 9913
வளர்ப்பு நாய் ஒன்று மேற்கொண்ட கோரத்தாக்குதலில் அதன் உரிமையாளர் கொல்லப்பட்டுள்ளார். பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை Maine-et-Loire மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. Rottweiler வளர்ப்பு நாய் ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து அதன் உரிமையாளரை தாக்கியுள்ளது. காவல்துறையினர் அழைக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்றடைந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.
வயது குறிப்பிடப்படாத நபர் ஒருவரின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடித்து குதறியதில் அவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்துள்ளார். அவர் உயிரிழந்தவரின் தாயார் என அறிய முடிகிறது.. மேலும் இருவர் உயிரச்சத்தில் அருகில் உள்ள மகிழுந்து ஒன்றுக்குள் பதுங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
குறித்த Rottweiler நாய் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டது.


























Bons Plans
Annuaire
Scan