Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 1,554 பேர் கைது

இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 1,554 பேர் கைது

30 மார்கழி 2023 சனி 12:08 | பார்வைகள் : 5134


இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் 84 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் இருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்