சூடான் மக்களுக்கு கனடா அரசின் அதிரடி திட்டம்

30 மார்கழி 2023 சனி 09:00 | பார்வைகள் : 6516
கனடா அரசாங்கம் சூடான் மக்களுக்கு வீசா வழங்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் வீசா வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அதிகளவான சூடானியர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த புதிய நடைமுறை குறித்து அறிவித்துள்ளார்.
சூடானில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் சூடானிய பிரஜைகளுக்கு கனடிய வீசா வழங்கப்பட உள்ளது.
கனடாவில நிரந்தர வதிவிடவுரிமை உடைவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு வீசா வழங்கப்பட உள்ளது.
கனடாவில் நிதி ரீதியாக உதவக்கூடியவர்களது சூடான் வாழ் உறவினர்களுக்கு இவ்வாறு வீசா வழங்கப்பட உள்ளது.
எவ்வாறெனினும், எவ்வாறான நிதி ரீதியான உதவி என்பது பற்றிய பூரண விபரங்களை குடிவரவு அமைச்சு வெளியிடவில்லை.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025