பிரான்சில் முதன் முறையாக - செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நகரசபை இணையத்தளம்!

30 மார்கழி 2023 சனி 07:00 | பார்வைகள் : 13526
பொதுமக்களுக்கான இணையத்தளம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவை (AI) இணைத்து தகவல்களை வழங்குவதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளது.
Issy-les-Moulineaux (Hauts-de-Seine) நகரசபை இணையத்தளமே இவ்வாறு செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் முதன்முறையாக இந்த வசதி ஒரு நகரசபை இணையத்தளத்தில் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து பரீட்சாத்தமாக முயற்சி செய்யப்பட்டு, தற்போது முற்றுமுழுதாக இணைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.
நகராட்சி சேவைகள், நிர்வாக நடைமுறைகள், உள்ளூர் நிகழ்வுகளின் தகவல்கள், தொலைத்தொடர்பு இலக்கங்கள் போன்ற தகவல்களை தேடும்போது செயற்கை நுண்ணறிவு மூலம் மிக துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025