Paristamil Navigation Paristamil advert login

Yvelines : மகிழுந்து மோதியதில் மூன்று காவல்துறையினர் காயம்!!

Yvelines : மகிழுந்து மோதியதில் மூன்று காவல்துறையினர் காயம்!!

29 மார்கழி 2023 வெள்ளி 16:29 | பார்வைகள் : 7005


கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து ஒன்று காவல்துறையினரை மோதித்தள்ளியுள்ளது. இதில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று டிசம்பர் 28, வியாழக்கிழமை இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றது. Mantes-la-Jolie to Rosny-sur-Seine ஆகிய நகரங்களை இணைக்கும் வீதியில், மாலை 4.40 மணி அளவில் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 26 வயதுடைய ஒருவர் மகிழுந்தைச் செலுத்திக்கொண்டிருந்துள்ளார்.

அவர் மகிழுந்தைச் செலுத்தும் விதத்தில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர், அவரைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து, காவல்துறையினர் மீது மோதியது. இச்சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர்.

மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்