காவல்துறையினரின் மகிழுந்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்ற நபர்!
 
                    29 மார்கழி 2023 வெள்ளி 13:32 | பார்வைகள் : 9845
காவல்துறையினரின் கைவிலங்கை அவிழ்த்து விட்டு நபர் ஒருவர் காவல்துறையினரின் மகிழுந்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
நேற்று டிசம்பர் 28, வியாழக்கிழமை இச்சம்பவம் Châtillon (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. கொலை முயற்சி குற்றம் ஒன்றுக்காக அங்கு வசிக்கும் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு சகோதரர்களில் ஒருவர், கை விலங்கை அவிழ்த்து விட்டு, காவல்துறையினரின் மகிழுந்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
மகிழுந்தில் பொருத்தப்பட்டுள்ள GPS கருவி மூலம் அது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிச் சென்றவரும் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan