ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?
29 மார்கழி 2023 வெள்ளி 07:59 | பார்வைகள் : 6094
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிக என்பவருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர், ஸ்ருதிஹாசன் - சாந்தனு ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று ஒரு பதிவை செய்துள்ளார்கள்
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன் ’என்னுடைய வாழ்க்கை முறையை நான் எப்போதும் யாரிடமும் மறைத்ததில்லை. கல்யாணம் என்றால் யாரிடம் சொல்லாமல் எப்படி முடிப்பேன்? நிச்சயம் அனைவரிடம் சொல்லிட்டு தான் முடிப்பேன். இந்த செய்தியை யாரோ ஒருவர் தேவை இல்லாமல் பரப்பி உள்ளார் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக பதிவு செய்துள்ள புகைப்படக்காரர் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் நடந்து விட்டதாக வதந்தியை பரப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan