கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
29 மார்கழி 2023 வெள்ளி 07:34 | பார்வைகள் : 5793
கனடாவில் அல்பர்ட்டாவில் பனிப்பொழிவு நிலவி வருகின்றது.
இந்த பகுதிகளில் பயணம் செய்வது அபாயகரமானது என அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பனி படர்ந்திருந்த நீர்நிலையொன்றில் வீழ்ந்து மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.
நத்தார் பண்டிகைக்கு முன்னர் காணாமல் போயிருந்தவர்களே இவ்வாறு சடலங்காக மீட்கப்பட்டிருந்தனர்.
கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இவ்வாறு விபத்தில் சிக்கியிருந்தனர்.
பனிப்பொழிவுடன் காணப்படும் நீர் நிலைகளில், வாகனங்களை செலுத்துவது அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 15 முதல் 20 சென்றிமீற்றர் வரையில் பனிபடர்ந்த பகுதிகளில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபட முடியும்.
25 சென்றி மீற்றருக்கு அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டால் மட்டுமே வாகனங்களை அதன் மேல் செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan