20 வருட சினிமா பயணம் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி!
28 மார்கழி 2023 வியாழன் 12:21 | பார்வைகள் : 6190
சினிமாவிற்குள் நுழைந்து இருபது வருடங்களானதையொட்டி நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியானப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிப் பெற்றவர்களில் நடிகை நயன்தாராவும் ஒருவர். மலையாளத் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் பின்பு மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்தில் இருந்து தமிழ் படங்களுக்கு வந்தவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவரின் தனிப்பட்ட வாழ்வில் சில சர்ச்சைகள் இருந்தாலும் இப்போது விக்னேஷ் சிவன் மற்றும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நயன். நடிகை, தயாரிப்பாளர் மட்டும் என்றில்லாமல் பல பிசினஸ்களிலும் முதலீடு செய்துள்ளார். அந்த வகையில், அவர் சினிமாத் துறையில் 'மனசினக்கரே' என்ற படம் மூலம்தான் கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகமானார்.
அதில் அவர், “எனது ரசிகர்களாகிய உங்களுக்காவே இந்த கடிதம். திரைத்துறையில் இந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் நான் இங்கு நிற்க நீங்கள்தான் காரணம். நீங்கள் தரும் உற்சாகம்தான் எனது உத்வேகம். நீங்கள் இல்லாமல், இந்தப் பயணம் சாத்தியமாகி இருக்காது. நான் கமிட்டாகும் ஒவ்வொரு கதையையும் படம் என்பதையும் தாண்டி அதை எனக்கு மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவது நீங்கள்தான். நீங்கள் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் சாத்தியமாகி இருக்காது. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வேண்டும்" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan