முடிந்தவரை முகக்கவசம் அணியுங்கள் - இலங்கை மக்களிடம் வேண்டுக்கோள்
28 மார்கழி 2023 வியாழன் 10:54 | பார்வைகள் : 13832
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் நிபுணரான ஷசிந்தன பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்த்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்ச்சல் மற்றும் சளி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருவதாகக் கூறும் நிபுணர் ரோஹித முத்துகல புதிய கொவிட் திரிபு வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan