வருங்கால கணவர் குறித்து ஸ்மிருதி மந்தனாவின் விருப்பம்
28 மார்கழி 2023 வியாழன் 10:16 | பார்வைகள் : 9655
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
27 வயதான மந்தனா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் 'இன்ஸ்டாகிராமில் உங்களை நிறைய ஆண்கள் பின்தொடர்கிறார்கள்.
உங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், எந்தவிதமான குணாதிசயங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிரித்தபடி மந்தனா அளித்த பதிலில், 'இதுபோன்ற கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.
அவர் நல்ல பையனாக இருக்க வேண்டும். என் மீது அக்கறை உடையவராக, என் விளையாட்டை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.
நான் விரும்பும் இரண்டு குணங்கள் இது தான். நான் விளையாட்டில் இருப்பதால் அவரிடம் அதிக நேரம் செலவிட முடியாது.
அதை புரிந்துகொண்டு என் மேல் மிகுந்த அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது தான் நான் முக்கியமாக பார்க்கக்கூடியது' என்று கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan