எக்ஸ் தளத்தில் இனி பண பரிமாற்ற முடியும் - எலான் மஸ்கின் அதிரடி

28 மார்கழி 2023 வியாழன் 09:25 | பார்வைகள் : 7776
உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் தான் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர்.
இவர் பல மாற்றங்களை செய்து வருகின்றார். தற்போது மற்றுமொரு அப்டேட்டை வழங்கியுள்ளார்.
"எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் இது நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025